புதுச்சேரி அரசு அறிவிப்பு!! தினசரி 22 மணி நேரம் முழு ஊரடங்கு!!

தினசரி 22 மணி நேரம் முழு ஊரடங்கு:

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் இன்று முதல் நாள்தோறும் 22 மணி நேரம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு அறிவிப்பு: 

மேலும் இரண்டாம் அலை கொரோனா வைரஸ் கடந்த வருடத்தை விட அதிக வீரியத்துடன் மக்களை தாக்கி வருகிறது. இது உருமாறிய வைரஸ் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதை தொடர்ந்து புதுச்சேரியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கையாக அரசு தினசரி 22 மணி நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. இதன் படி இன்று முதல் இந்த 22 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. இதன்படி பகல் 12 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை 22 மணி நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகள் அனைத்தும் 2 மணி நேரம் மட்டுமே செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.