அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, சமையல் எண்ணெய் இலவசம்!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மல்லிகை பொருட்களை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

பொருட்கள் விநியோகம்:

புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறையின் திட்டங்களான புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் தீபாவளி/ஒனம் பண்டிகை காலத்தில் இலவசமாக சர்க்கரை விநியோகம் செய்யப்படும்.

புதுச்சேரி ரேஷனில் இலவச பொருட்கள்:

அதேபோல் புதுச்சேரியில் உள்ள அனைத்து உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசிய உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்.

ஆதார் அட்டை இல்லாத நபர்கள்:

இந்த திட்டங்களின் கீழ் பயனடைய ஆதார் அட்டை இல்லாதவர்கள் அல்லது அந்த நபருக்கு ஆதார் அட்டை வழங்கப்படும் வரை- புகைப்படம் ஒட்டப்பட்ட மாற்று ஆவணங்களை அளிப்பதற்கான குடிமைப்பொருள் வழங்கல் துறையின் முன்மொழிவிற்கும் துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்துகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!