தமிழக சத்துணவு துறையில் கணினி உதவியாளர் வேலை வாய்ப்பு!!!

Pudukkottai District Computer Assistant Recruitment 2021 – புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. சத்துணவுத்‌ திட்டம்‌, புதுக்கோட்டை மாவட்டத்தில்‌ 13 ஊராட்சி ஒன்றியங்களில்‌ சத்துணவுப்‌ பிரிவிற்கு தலா ஒரு கணினி உதவியாளர்‌ பணியிடம்‌ மட்டுமே உள்ளன. விருப்பமுள்ள நபர்கள் 28.10.2021 முதல் 16.11.2021 மாலை 6:00 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும். இதற்கான பணிக்கான முழு விவரமும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Pudukkottai District Computer Assistant Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தமிழக சத்துணவு துறை
பணியின் பெயர்கணினி உதவியாளர்‌
காலி பணியிடம்13
கல்வித்தகுதி Graduate, English Typing
பணியிடம் புதுக்கோட்டை 
ஆரம்ப  தேதி28/10/2021
கடைசி தேதி16/11/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://pudukkottai.nic.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

புதுக்கோட்டை 

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Pudukkottai District

பணிகள்:

கணினி உதவியாளர்‌ பணிக்கு 13 காலிப்பணியிடங்கள் உள்ளன.

தமிழக சத்துணவு துறை கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால்‌ ஒரு பட்டம்‌ பெற்றிருக்க வேண்டும்‌. இளநிலை தட்டச்சு ஆங்கிலம்‌ மற்றும்‌ தமிழ்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

அனுபவம்:

கணினியில்‌ M.S.Office அனுபவம்‌ பெற்றவராக இருத்தல்‌ வேண்டும்‌.

கணினி இயக்குபவர்‌ மாத சம்பள விவரம்::

கணினி இயக்குபவர்‌ பணியிடத்திற்கு மாதம்‌ ரூ.12,000/- வரை  மாத சம்பளமாக வழங்கப்படும்.

பணிநியமனம்:

இப்பணியிடம்‌ பகுதி நேர அடிப்படையில்‌ முற்றிலும்‌ தற்காலிகமானது. பணியமர்த்தப்படும்‌ பணியாளர்‌ வேலை திருப்திகரமாக இருப்பின்‌ இப்பணியிடத்திற்கு உரிய பணி தொடராணை பெறப்பட்டு பணிக்கால நீட்டிப்பு வழங்கப்படும்‌. ஒவ்வொரு ஆண்டும்‌ குறைந்தபட்சம்‌ ஒரு வார கால இடைவெளி விட்டு பணியிடம்‌ புதுப்பிக்கப்படும்‌.

எவ்விதமான முன்னுரிமையோ அல்லது பணி நிரந்தரம்‌ செய்ய கோரவோ இயலாது. இப்பணியிடம்‌ அரசு அனுமதிக்கும்‌ காலம்‌ மற்றும்‌ நிதி ஒதுக்கீடு வழங்கப்படும்‌ காலம்‌ வரை மட்டுமே அனுமதிக்கப்படும்‌.

கணினி உதவியாளர்‌ விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய பெயர்‌/ தாய்‌, தந்‌ைத பெயர்‌/ தேசிய இனம்‌, வகுப்பு/ பிறந்த தேதி இருப்பிட முழு முகவரி, தொலைபேசி எனளர்‌,/ கைபேசி என்‌, கல்வித்‌ தகுதி, தொழில்நுட்ப /கணினி தகுதி/ முன்‌ அனுபவம்‌ ஆகியவற்றினை முழு வெள்ளைத்‌ தாளில்‌ தட்டச்சு செய்து கையொப்பமிட்டு விண்ணப்ப படிவத்துடன்‌ கல்லூரி மாற்று சான்று, பட்டம்‌ பெற்றதற்கான மதிப்பெண்‌ சான்று, தட்டச்சில்‌ தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ கீழ்நிலை தேர்ச்சி பெற்றதற்கான சான்று, முன்‌ அனுபவ சான்று, குடும்ப அட்டை மற்றும்‌ வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின்‌ நகல்கள்‌Gazetted Officer-ன்‌ மேலொப்பம்‌ பெற்று மாவட்ட ஆட்சியர்‌, சத்துணவுத்‌ திட்டப்பிரிவு, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌, புதுக்கோட்டை என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

திறமை படைத்தவர்கள் வரும் 16.11.2021 அன்று மாலை 5.00 மணிக்குள்   குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் 16.11.2021 பிறகு வரப்பெரும் விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கவிதா ராமு, இ. ஆ. ப., அவர்கள் தெரிவித்தார்.

கணினி உதவியாளர்‌ வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சியர், சத்துணவு திட்டப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் வளாகம், புதுக்கோட்டை.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி28.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி16/11/2021 at 5.00 PM

Pudukkottai District Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDFClick here
Official WebsiteClick here