காலாண்டு மற்றும் அரையாண்டு இந்த ஆண்டு தேர்வுகள் ரத்து!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு:

10,11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திட்டமிட்டபடி நவம்பர் 1ஆம் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், 10,11,12ம் வகுப்புகளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்த ஆண்டு நடத்துவதற்கான வாய்ப்பில்லை. டிசம்பர் மாதத்தில் ஒருங்கிணைந்த முறையில் ஒரே ஒரு தேர்வை மட்டும் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!