தனியார் பள்ளிகளில் இன்று காலாண்டு தேர்வு துவக்கம்!!

புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் பயிலும், 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு அட்டவணை அனுப்பட்டுவரும் நிலையில், அரசு பள்ளிகளில் அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

காலாண்டு தேர்வு:

வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுதி பள்ளிகளில் சமர்ப்பிக்க மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகளை இம்மாதம் இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடர்பான அட்டவணை எதுவும் வெளியிடப்பட்டவில்லை.

இதற்கிடையே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை அவரவர் பெற்றோர்களின் செல்போன்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்டு வருகிறது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!