மாணவர்களுக்கு வினாடி – வினா போட்டி பள்ளிகல்வித்துறை உத்தரவு!

வினாடி வினா:

அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் சார்ந்து சிறப்பு வினாடி வினாவை நடத்துமாறு தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும்‌, கோவிட்‌-19 காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கவும்‌ இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல்‌ மாலை 5 மணிக்குள்‌ உயர்தர தொழில்நுட்ப ஆய்வகத்தில்‌ உள்ள கணினிகளின்‌ எண்ணிக்கைக்கேற்ப ஒவ்வொரு குழுவினருக்கும், மாணவர்‌ எமிஸ் லாகின் மற்றும் கடவுச்சீட்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி 1 மணி 30 நிமிடம்‌ கால அவகாசம்‌ அளித்து நடத்த வேண்டும்‌.

சனிக்கிழமையன்று முடிக்க இயலாத நிலையில்‌ அடுத்து வரும்‌ செவ்வாய் கிழமையன்றும்‌ நடத்தி முடிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள்‌ வினாடி வினா போட்டிக்கான விடைகளை மாணவர்களிடம்‌ கலந்துரையாட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இத்தேர்வு முடிந்தவுடன்‌ அடுத்த பள்ளி வேலை நாளில்‌ நடந்து முடிந்த போட்டிக்கான வினா விடைகள்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்களின்‌ மின்னஞ்சல்‌ முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்‌.

அரசுப்‌ பள்ளிகளுக்கும்‌ அனுப்பிவைத்து சம்பந்தப்பட்ட, பாட ஆசிரியர்கள்‌ வினாடி வினா போட்டிக்கான விடைகளை மாணவர்களிடம்‌ கலந்துரையாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!