தனித்து வசிக்கும் பெண்கள் ரேஷன் அட்டையை சுலபமாக பெறுவது எப்படி?

தமிழகத்தில் ரேஷன் அட்டைகளின் பெயரே குடும்ப அட்டை என்று அறியப்படுவதில் இருந்து, குடும்பத்திற்கும், ரேஷன் பொருட்கள் வாங்குவதற்குமான தொடர்பை அறிந்துக் கொள்ளலாம். ஆனால், தனித்து வாழும்  பெண்கள் எப்படி தனியாக ரேசன் அட்டை வாங்குவது என்பது குறித்த சந்தேகங்கள் எழுவது இயல்பு.

”எனவே, தனியாக வசிக்கும் பெண், கணவரால் நிராதரவாக கைவிடப்பட்டு அல்லது திருமண வாழ்க்கை முறிந்து தனியாக வசித்துவரும் நிலையில், அவரது ஆதார் எண், கணவர் வைத்திருக்கும் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டிருந்தால், சம்மந்தப்பட்ட பெண் மற்றும் அவரை சார்ந்துள்ள குழந்தைகள் தனியாக வசித்து வருவது தணிக்கை மூலம் உறுதி செய்யப்படுவதன் மூலம் ரேஷன் அட்டையை தனியாக வசிக்கும் பெண் பெறலாம்”.

“அதற்கு பெண் எழுத்து மூலமான வாக்குமூலத்தை, சம்மந்தப்பட்ட அலுவலரிடம் கொடுக்க வேண்டும். அதிகாரி, தனது அதிகார வரம்பினை பயன்படுத்தி குடும்பத்தலைவரின் அனுமதியில்லாமல் சம்மந்தப்பட்ட பெண்ணின் பெயரினை குடும்ப அட்டையிலிருந்து நீக்கலாம். தனியாக வாழும் சம்மந்தப்பட்ட பெண்மணி, புதிய குடும்ப அட்டைக் கோரும்போது சட்டபூர்வமான நீதிமன்ற விவாகரத்துச் சான்று போன்ற ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்க வலியுறுத்தாமல் புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!