ரேஷன் அட்டைதாரர்ககளுக்கு அனைத்து பொருட்களும் ஒரே தவணையில் தர உத்தரவு!!

ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் சரி வர நடைபெறவில்லை என புகார்கள் எழுந்து வந்த நிலையில் ஒரே தவணையில் ரேஷன் பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ரேஷன் பொருட்கள்:

கார்டுதாரர்களை அலைக்கழிக்காமல் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஒரே தவணையில் வழங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களை கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி ரேஷன் ஊழியர்கள் முதல் வாரத்தில் வருபவர்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.

மற்ற வாரங்களில் வருபவர்களுக்கு ஏதேனும் பொருட்கள் இல்லை என்று கூறி திருப்பி அனுப்புவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்குகிறது. எனவே கடைக்கு வரும் கார்டுதாரர்கள் அலைக்கழிக்க கூடாது என உத்தரவிடப்பட்டது. மேலும் கடைகளுக்கு முழு அளவில் உணவு பொருட்களை ‘சப்ளை’ செய்ய வாணிப கழகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!