பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை கிடைப்பதில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிக்கல்!!

இலவச வேட்டி, சேலை தயாரிக்க விசைத்தறிகளுக்கு நூல் இன்னும் வழங்காததால் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வேட்டி, சேலை விநியோகிக்க முடியாத சூழல் உருவாகியிருப்பதாக நெசவாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பரிசு:

தமிழகத்தில் 1,30,000 ஆயிரம் விசைத்தறிகள் செயல்படாமல் இருப்பதால் அதனை சார்ந்து இருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

இவற்றை தயாரிக்க ஆறு மாதங்கள் தேவைப்படும் என்பதால் ஆண்டுதோறும் ஜூன் மாதம் நிதி ஒதுக்கப்பட்டு விசைத்தறிகளுக்கு பாவுநூல், ஊடை நூல் உள்ளிட்ட மூலப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

நெசவாளர்கள் கருத்து தெரிவிப்பு: 

ஜூன் மாதம் கொடுக்கப்பட வேண்டிய டெண்டர் இந்த மாதத்தில் கொடுக்கப்பட்டாலும், நூல்களுக்கு சாயம் இடும் பணிகள் முடிவடையவே அக்டோபர் மாதம் ஆகும்.

அதனால் இன்னும் 3 மூன்று மாதங்களுக்குள் 1 கோடி 80 லட்சம் குடும்பங்களுக்கும் வேட்டி, சேலைகளை வழங்க முடியாது என்று நெசவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.