ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இனி சேவை இலவசம்!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பில் மலிவு விலையில் பொருள்கள் வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கும் ஆயுஷ்மான் கார்டு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

ரேஷன் அட்டைகள்:

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஊர் விட்டு ஊர் போகும் மக்களின் நலனிற்காக ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி இருக்கிறது. பல மாநிலங்களில் இந்த திட்டமானது நல்லபடியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு ஆயுஷ்மான் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டம் மூலமாக ஆயுஷ்மான் கார்டு வைத்திருக்கும் பயனாளிகள் நாடு முழுவதும் இலவசமாக மருத்துவ சிகிச்சை செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் நீங்கள் பயன் பெற அந்தோதயா ரேஷன் அட்டை இருந்தால் போதும், அதற்காக ரேஷன் அட்டைதாரர்கள் ஆயுஷ்மான் கார்டு வாங்க வேண்டும். இந்த கார்டு பெற மக்கள் பொது சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் சேர மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் இலவச ரேஷன் வாங்கி இருந்தாலே போதுமானது.

அது மட்டுமில்லாமல் அந்தோதயா ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவரும் ஆயுஷ்மன் கார்டு பெறலாம். நாடு முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெறலாம். மேலும் அந்தோதயா திட்டத்தின் கீழ் பயன்பெறாதவர்களால் ஆயுஷ்மான் கார்டு பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு பெரிய வர பிரசாதமாக இருக்கிறது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!