ரேஷன் பொருட்கள் அக்.15ம் தேதிக்குள் ‘இந்த’ முறையில் வழங்க அமைச்சர் பேட்டி!!

ரேஷன் பொருட்கள்

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன் அடையும் விதத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ரேஷன் பொருட்களை தகுதியற்ற நபர்கள் பெற்று கள்ள சந்தைகளுக்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்வது சோதனையில் கண்டறியப்பட்டது. அதனால் இதனை தடுக்க கூட்டுறவுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்ட நடவடிக்கையாக பயோமெட்ரிக் முறை அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்பட்டது.

இந்த பயோமெட்ரிக் முறையில் உணவு பொருட்கள் அனைத்தையும் ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகை பதிவு செய்த பிறகு விநியோகிக்கப்படுகிறது. இதன் மூலமாக ரேஷன் பொருட்கள் தகுதியான நபர்களுக்கு வழங்குவது உறுதியாகிறது. ஆனால் இந்த முறையால் வயதானவர்களுக்கு சரிவர தங்களின் கைரேகை பதிவு செய்ய முடிவதில்லை. அதனால் ரேஷன் பொருட்களை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு வர முடியாததால், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தகுதியான நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!