ரேஷன் கடைகளில் பணியிடங்களை நிரப்ப இறுதி பட்டியல் விரைவில் வெளியீடு!

தேர்வு பட்டியல்:

கடந்த ஆண்டு தமிழக  ரேஷன்  கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களின் மூலம் தகுதி பெற்றோர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.  அதில் தேர்வு செய்ய பட்டவர்களின் பட்டியல் இன்று வரை வெளியிடப்படவில்லை. இதனை சார்ந்து விண்ணப்பித்தவர்கள் கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கூடிய விரைவில் வெளியிடப்படும் என கூட்டுறவு துறையின் அறிவித்துள்ளது.

பணிசுமை:

தமிழக  ரேஷன்  கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி சுமை அதிகமாக உள்ளதால் ரேஷன்  கடைகளில் காலியாக உள்ள 5,578 விற்பனையாளர் மற்றும் 925 எடையாளர்  பணியிடங்களை நிரப்ப கோரிக்கை வைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

41,000 பேர் விண்ணப்பம்:

இப்பணிக்கு 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 32 வயதிற்குட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 5,578 விற்பனையாளர் பணியிடத்திற்கு 3.75 லட்சம் பேர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தனர். அடுத்ததாக 925 எடையாளர் பதவிக்கு 41,000 பேர் விண்ணப்பம் செய்த நிலையில் மொத்தம் 4.16 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு நேர்காணல் நடைப்பெற்று பல மாதங்கள் ஆகியும் தேர்வு பட்டியல் வெளியிடவில்லை.

இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு:

இது குறித்து பதிலளித்த கூட்டுறவுத்துறை விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் ரேஷன் கடை பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் இவர்களது இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

Scroll to Top