தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு அடுத்த மாதம் 3 நாட்கள் விடுமுறை….!!!!

அரசுக்கு கோரிக்கை:

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு தீபாவளிக்கு அடுத்து வரும் சனிக்கிழமையும் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை தரவேண்டுமென்று ரேஷன் கடை ஊழியர்கள் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் 1 மற்றும் 2 ஆம் வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை ஆகும். இதற்கு பதிலாக அந்த வாரத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகள் செயல்படும்.

தீபாவளி பண்டிகை நவம்பர் 4ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. அன்று அரசு விடுமுறை. அதன் பிறகு வரும் வெள்ளிக்கிழமை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் நவம்பர் விடுமுறை நாளாக உள்ளது. எனவே தீபாவளி பண்டிக்கைக்காக நவம்பர் 1ம் தேதி முதல் 3 நாட்கள் ஊழியர்கள் அதிக நேரம் பணியாற்றுவதால் அதனை ஈடுகட்டும் விதமாக நவம்பர் 6ம் தேதியான சனிக்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.