தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம்!

நவம்பர் 4 ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகிப்பதற்காக கடைகள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடைகள் :

தீபாவளி பண்டிகை நவம்பர் மாத தொடக்கத்திலேயே வருவதால் ரேஷன் பொருட்களும் பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். என்று முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ரேஷன் கடை ஊழியர்கள் சரியான எடையில் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும். பொது மக்களை கடை ஊழியர்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதில் ஏதும் புகார்கள் வந்தால் கடை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை பெற்று செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!