ஊரடங்கு காரணமாக வரும் மாதங்களின் ரேஷன் கடைகளுக்கு புதிய அறிவிப்பு!! மக்கள் ஆர்வம்!!

கொரோனாவின்  தாக்கம்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கடந்த ஆண்டை போல இல்லாமல் மிக தீவிரமாக பரவி வருவதால்  20 ஆயிரத்திற்கும்  மேற்பட்டவர்கள்  பாதிப்புக்கு உள்ளாகின்றன.  எனவே மருத்துவமனையில்  நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் புதிதாக வருவோருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

கடந்த மாதத்தில்:

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் பொதுவாக மாதத்தில் முதல் 2 வெள்ளிக்கிழமைகள் விடுமுறை நாளாக இருக்கும். அதற்கு பதிலாக ஞாயிற்று கிழமைகளில் வேலை நாட்களாக இருக்கும்.

இனி வரும் மாதங்களில்:

வார இறுதி நாளான ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ரேஷன் கடைகளும் மாதத்தில் 2 வெள்ளிக்கிழமைகளில் செயல்படும் எனவும் ஞாயிற்று கிழமை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!