தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களுக்கு ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை இயங்க உத்தரவு!!

அத்தியாவசிய பொருட்கள்:

தீபாவளி பண்டிகையொட்டி வரும் நவம்பர் 1 முதல் 3ம்தேதி வரை ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க வேண்டும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

தமிழக அரசின் உத்தரவு:

இதற்காக ரேஷன் கடைகளுக்கு அடுத்த மாதம் வழங்குவதற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் இந்த மாத இறுதியிலேயே அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சிரமப்படக்கூடாது என்று முன்கூட்டியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அறிவிக்கப்பட்டுள்ள நாட்களில் ரேஷன் கடைகள் முறையாக திறந்து செயல்படுவதையும், அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!