TNPSC group 4 VAO தேர்வுக்கு தயாரா? சில முக்கிய குறிப்புகள்!

TNPSC குரூப் 4 தேர்வு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான குறிப்புகள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

என்னென்ன பதவிகள்?

TNPSC குரூப் 4 தேர்வானது

  1. இளநிலை உதவியாளர் (Junior Assistant)
  2. தட்டச்சர் (Typist)
  3. சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist)
  4. கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer)
  5. வரித் தண்டலர் (Bill Collector)
  6. நில அளவர் (Field Surveyor)
  7. வரைவாளர் (Draftsman)

கல்வித் தகுதி:

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதுமானது.

வயதுத் தகுதி:

இத்தேர்விற்க்கான வயது தகுதி கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கு,

  • பொதுபிரிவினருக்கு 21 முதல் 30 வரை.
  • பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு.
  • இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 18 வயது முதல் 30 வரை.
  • பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரை சலுகை உண்டு.

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு மொத்தம் 200 வினாக்கள் கொண்டது.  அவற்றிற்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் (ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள்) கிடைக்கும்.

இத்தேர்வில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அவற்றில் 100 வினாக்கள் தமிழ் (அ) ஆங்கிலம் பாட பகுதியிலிருந்து கேட்கப்படும்.

தேர்வர்கள் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

மேலும் 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75-பொது அறிவு வினாக்களும் , 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!