சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னைக்கு ‘ரெட் அலெர்ட் எச்சரிக்கை:

திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் நாளை மறுநாளான 18ஆம் தேதி, அதிகனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் நகரின் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் எனவும், அடுத்த 48 மணி நேரத்தில், சென்னையின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாளான 18ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கான  வாய்ப்பும், குறிப்பிட்ட சில இடங்களில் அதிகனமழைக்கான வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

அதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!