செப்.30 முதல் இணையதளம் முலமாக பிளஸ் 1 மதிப்பெண் பட்டியல் வெளியீடு!!

அரசு தேர்வு இயக்கம்:

பிளஸ் 1 மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் செப்.30 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

”மார்ச் 2021 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசியர் வழியாக 30.09.2021 அன்று பிற்பகல் 1 மணி முதல் இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களது மதிப்பெண் பட்டியலைப் பெற்றுக்கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு:

இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் சான்றொப்பம் இட்டிருந்தால் மட்டுமே மதிப்பெண் பட்டியல் செல்லும்”.