அடுத்தடுத்து சிக்கும் அழுகிய முட்டை! சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்!!

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு பள்ளியில் சத்துணவு வழங்கப்படுகிறது. சத்துணவில் கூட அதிகாரிகள் பலரும் குளறுபடி செய்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் நேற்றைய தினம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் அழுகிய முட்டை விவகாரத்தில் சத்துணவு அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் ஆனார். அதன்படி அழுகிய முட்டை வழங்கிய விவகாரத்தில் இந்த சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட் ஆனார்.

பள்ளி குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்கியதாக எழுந்த புகாரின் பேரில் சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு முட்டை அழுகி இருந்ததாக புகார் வந்தது.

புகாரின் பேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் இன்று பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். ஆய்வின் முடிவில் ஜெயந்தியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!