குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 சுதந்திர தினத்தில் அரசு அறிவிப்பு?

தமிழகம் முழுவதும் அனைத்துகுடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000; சுதந்திர தினத்தில் அரசு அறிவிப்பு?

அரசு சுதந்திர தினத்தன்று வெளிவரப்போகும் செய்தி:

இந்நிலையில், விரைவில் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. இதனால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை, தமிழக அரசு, சுதந்திர தினத்தன்று வெளியிடபி அமைச்சர்  முடிவு செய்துள்ளது.

உரிமைத் தொகை:

தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் திமுக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த உடன் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளை தொடங்கியது.

அதன்படி, தமிழக மக்களுக்கு ரேஷன் அட்டைகளுக்கு கொரோனா ஊரடங்கு கால நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கும் திட்டத்திற்கு முதல் கையெழுத்து இடப்பட்டது.

அதன்பிறகு, தமிழகம் முழுவதும் அரசு நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாக பயணிக்கும் திட்டத்தை அமல்படுத்தியது.

அரசுக்கு கோரிக்கை:

இந்நிலையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டம் இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதால் பல தரப்புகளில் இருந்தும் இது குறித்து அரசுக்கு கோரிக்கைகள் எழுப்பப்பட்டது.

ரேஷன் அட்டைகளின் மாற்றம் குறித்து அமைச்சர் அறிவிப்பு:

இந்நிலையில், இந்த திட்டத்திற்காக பலரும் குடும்ப அட்டையில் பெண்களின் பெயரை குடும்ப தலைவியாக மாற்றும் முயற்சிகளில் இறங்கி வருகின்றனர். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்காக ரேஷன் அட்டைகளை மனைவியின் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டாம் என்று அமைச்சர் அறிவித்தார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!