தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம்! நாளை முதல் அமல்!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம்! நாளை முதல் அமல்!

தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவி வரும் காரணத்தால் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்களின் நலன் கருதி முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.  இதன் முதல் தவணையாக இம்மாதமே ரூ.2000 வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். அதனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடந்த மே 10ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ரேஷன் கடைகைளியில் ரூ.2000  நாளை முதல் வழங்கல்:

நாளை (மே 15) முதல் ரேஷன் கடைகளில் ரூ.2000 கொடுக்கப்பட உள்ளது. அதனால், பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களில் குறிப்பிடப்பட்டு உள்ள தேதி, நேரம் ஆகியவற்றின்படி முகக்கவசம் அணிந்து வந்து, உரிய சமூக இடைவெளியை பின்பற்றி வாங்கிகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக வரும் மே 16ம் தேதியான ஞாயிற்றுக் கிழமையும் ரேஷன் கடைகள் இயங்கும் என அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.