பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வைப்பு தொகை!! முதல்வர் அறிவிப்பு!!

தமிழக அரசு துறை வாரியாக பல அதிரடி நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது முதல்வரின் செயல்பாடுகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ஒன்றை முதல்வர் அறிவித்துள்ளார். அதில் தற்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

இந்த திட்டத்தின்படி ஒரேயொரு பெண் குழந்தை இருக்கும் குடும்பங்களுக்கு ரூபாய் 50,000ம், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் அந்த பெண் குழந்தைகளின் பெயரில் தலா 25,000 ரூபாயும் வழங்கப்படும்.

ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். அவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். சமூக நலப் பிரிவு அலுவலர், மகளிர் நல அலுவலர்களிடம் அசல் வைப்புநிதிப் பத்திரம், பயனாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 10ம் வகுப்பு தேர்ச்சி பட்டியல், பயனாளியின் பெயரில் தனி வங்கிக் கணக்குப் புத்தகம் இவைகளையும் விண்ணப்பத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த செய்தி உங்கள் நண்பர்கள், உறவினர்கள் யாருக்காவது தேவைப்பட்டால், அவர்களுக்கு அனுப்பி வையுங்கள். ஒரு பெண் குழந்தையின் எதிர்காலத்தில் விளக்கேற்றி வைப்போம். பெண்மையைப் போற்றுவோம்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!