அரசு அறிவிப்பு:
இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 உதவித் தொகை எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கின்ற வகையில் தற்பொழுது தமிழக அரசு வெளியிட்ட தகவல்.
குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை:
குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரேஷன் கடைகள் மூலம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. நாம் அனைவரும் அறிந்ததே. மேலும் பல வாக்குறுதிகளை தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு அளித்தார்.
அதனை தொடர்ந்து கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கடைகளில் ரூபாய் 4000 இரு தவணைகளாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் இன்னும் தரப்படவில்லை.
இந்த நிலையில் ரேஷன் அட்டையில் பெயர், புகைப்படம் மாற்றுவது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என உணவுப் பொருட்கள் வழங்கல் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து முதல்வர் ஆலோசித்து முடிவு எடுப்பார். அதன் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!