RTE மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 13 வரை கால அவகாசம் நீட்டிப்பு அரசு அறிவிப்பு!!

RTE மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 13 வரை கால அவகாசம் நீட்டிப்பு – தமிழக அரசு அறிக்கை!

கால அவகாசம் நீட்டிப்பு:

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்களை அரசு இட ஒதுக்கீடு முறையில் சேர்க்கும் RTE திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஆகஸ்ட் 3ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள 8,300 தனியார் பள்ளிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் எல்.கே.ஜி மற்றும் ஒன்றாம் வகுப்பில் 1,03,330 இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தகவல்:

RTE முறையில் மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்த்தாலும், அதன்பின்னர் பல காரணங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் பலரும் இந்த ஆண்டு RTE முறையில் சேர்ப்பதற்கு தயங்குகின்றனர் என்று அரசுக்கு தகவல்கள் வந்தது.

கட்டாய கல்வி உரிமை சட்டம்:

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. இன்றுடன் கால அவகாசம் நிறைவடையும் நிலையில், ஊரடங்கை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இணையதளம்:

RTE திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் rte.tnschools.gov.in  என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!