தொடங்கியது ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை! பலத்த போலீஸ் பாதுகாப்பு!!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 23 ஆயிரத்து 998 பதவியிடங்களுக்கு நடந்த இந்த தேர்தலில் 79 ஆயிரத்து 433 பேர் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணும் பணியில் 31,245 அலுவலர்களும், பாதுகாப்பு பணியில் 6,228 போலீசாரும் ஈடுபட உள்ளனர்.

முக்கிய குறிப்பு:

வாக்கு எண்ணும் அறைகளில் அனைத்து நடவடிக்கைகளும் சிசிடிவி கேமராக்கள் மூலம் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். வேட்பாளர்கள், முகவர்கள் ஆகியோரை தவிர பொதுமக்கள் யாரும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதியில்லை எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் https://tnsec.tn.nic.in  இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!