இந்திய ஊழியர்களுக்கு 2023ம் ஆண்டில் சம்பள உயர்வு! வெளியான தகவல்!

இந்திய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு நடப்பு ஆண்டில் எவ்வளவு உயர்வு கிடைக்கும் என Aon நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சம்பள உயர்வு

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் எதிர்கொள்ளுவதற்காக ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.

இதே போல் தனியார் நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் தனியார் நிறுவன ஊழியர்கள் எந்த நிறுவனத்தில் அதிக சலுகைகள் கிடைக்கிறது என தேடி பார்த்து பணி புரிவார்கள். அதனால் தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை தக்க வைத்து கொள்ள சிறப்பான சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் இந்திய ஊழியர்கள் சம்பள உயர்வு குறித்து Aon நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஆண்டு இந்திய ஊழியர்களுக்கு சராசரியாக 10.6% சம்பள உயர்வு கிடைத்துள்ளது.

இதே போல் 2023ம் ஆண்டில் இந்திய ஊழியர்களுக்கு சராசரியாக 10.4% சம்பள உயர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த வருடம் சர்வதேச பொருளாதார நெருக்கடி, உள்நாட்டில் பணவீக்கம் உள்ளிட்டவை இருந்த போதிலும் 2023ம் ஆண்டில் இந்திய ஊழியர்களுக்கு சம்பள உயர்வானது இரட்டை இலக்கத்தில் தான் உயரும் என்றும் கூறியுள்ளது. இதில் மின்னணு வர்த்தகத் துறையில் ஊழியர்களுக்கு அதிகமாக (12.8%) சம்பள உயர்வு கிடைக்கும். இதற்கு அடுத்ததாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஐடி சார்ந்த சேவைகள் துறையில் ஊழியர்கள், நிதி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.