ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அரசுப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து அப்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அம்மாணவனின் அம்மாவிற்கு கொரோனா உறுதியானதால் செப்.2ம் தேதி மாணவன் பள்ளிக்கு செல்லவில்லை. இருப்பினும் அப்பள்ளியை சேர்ந்த 27 மாணவர்களுக்கும், 42 ஆசிரியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும், பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கபட்டது. அந்தப் பள்ளிக்கு தற்காலிகமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாட்களில் அடுத்தடுத்து மாணவர்களும், ஆசிரியர்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர். விரைவில் பள்ளிகள் மூடப்பட வாய்ப்புள்ளது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!