பள்ளிகள் மூடப்படும் பள்ளிக்கல்வித்துறை தகவல்!

பள்ளிகளுக்கு விடுமுறை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடிக்கடி மழை மற்றும் வெயில் என மாறி மாறி பருவநிலை இருப்பதால் அதிகமாக ப்ளூ காய்ச்சல் ஏற்படுகிறது. மருத்துவமனையில் ஏகப்பட்ட குழந்தைகள் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகளால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் காய்ச்சல் ஏற்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியிலும் காய்ச்சலால் ஏகப்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி மாணவர்களின் நலன் கருதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று (செப். 17) முதல் செப். 25 ஆம் தேதி வரை விடுமுறை விட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்று புதுச்சேரியில் பரவி வரும் காய்ச்சலை கருத்தில் கொண்டு செப். 25 ஆம் தேதி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பின் இந்த கல்வியாண்டில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து வகுப்புகள் வழக்கம் போல செயல்பட்டு வந்தன. ஆனால் தற்போது மீண்டும் அதிகாரிக்கும் காய்ச்சல் காரணமாக மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். தமிழகத்திலும் காய்ச்சல் பரவல் அதிகமாக இருக்கும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!