அரசு பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நிர்வாக சீரமைப்பு பற்றி, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குறிப்பிட்ட சில செயல்முறைகள் குறித்த அறிக்கையை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். அறிக்கை விவரங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பள்ளிகளுக்கு அறிவிப்பு:

தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்பட்டு வரும் இடைநிலைக் கல்வி, தொடக்கக் கல்வி, மற்றும் தனியார் பள்ளிகளில், அனைத்து செயல்முறைகளை குறித்து ஆய்வு செய்ய அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் நலனிற்காக ஏகப்பட்ட நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டு 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்யவும், அரசின் நலத்திட்டங்களை சரியான முறையில் சென்றடைகின்றதா என்பதை முறையாக கண்காணிக்க ஏதுவாக மாவட்ட கல்வி அலுவலகங்களை இடைநிலை கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் என பிரிக்கவும், பணி பகிர்மானம் செய்தும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதில் புதிதாக 32 மாவட்ட கல்வி அலுவலக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது.

மேற்கண்ட அடிப்படையில் பட்டியலில் உள்ளவாறு அனைத்து அலுவலகங்களுக்கும் சீரான எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர்களை நிர்ணயம் செய்து ஆணை பிறப்பிக்கப்படுவதுடன் அவற்றின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.