அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

பள்ளி கல்வித்துறை தெரிவிப்பு:

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்திலும் இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 2வது மற்றும் 4வது சனி விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை இயக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

தீபாவளி மற்றும் மழைக்கால விடுமுறைகளை கணக்கிடும் வகையில் இந்த சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தீபாவளிக்கு மறுநாள் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்கள் கூடுதலாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் அதேபோல் மழை நேரங்களில் கடந்த சில நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விடுமுறையை சரிகட்டவே அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!