சிறுத்தை நடமாட்டம் காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை!!

மாவட்ட ஆட்சியர் அனி மேரி ஸ்வர்ணா புதிய உத்தரவு

மயிலாடு துறையில் சிலநாட்களாக சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்தது. இச்சிறுத்தை நேற்று ஏப்ரல் 11 அரியலூர் மாவட்ட பொன்பரப்பி, சிதலவாடி பகுதிகளில் நுழைந்து சுற்றி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் அனி மேரி ஸ்வர்ணா புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன் படி, அரியலூர் மாவட்ட பள்ளிகள் அனைத்திற்கும் இன்று ஏப்ரல் 12 விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் புகுந்த சிறுத்தையை பிடிக்க 22 இடங்களில் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. சிறுத்தையின் நடமாட்டத்தால் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட விடுமுறையானது நாளை மற்றும் நாளை மறுநாள் வார இறுதி நாட்கள் என்பதால் தொடரப்படவுள்ளது. இவ்வாறு தொடர் விடுமுறை வழங்கப்பட்டால் ஆண்டு இறுதித் தேர்வுக்கு எவ்வாறு தயாராகுவது என்னும் குழப்பத்திலும், அச்சத்திலும் மாணவர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டத்தின் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறை தொடருமா? ஆண்டு இறுதித் தேர்வானது நடைபெறுமா என்னும் குழப்பத்திலும், அச்சத்திலும் மாணவர்கள் தவித்து வருகிறார்கள்.

Leave a Comment