இன்று பள்ளி திறப்பு: பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்க ஏற்பாடு!!

1 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் படிக்கும் 32 ஆயிரம்  தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.  அந்தந்த  தொகுதி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பூங்கொத்து, பரிசுப் பொருட்கள் கொடுத்து மாணவ -மாணவியரை வரவேற்க உள்ளனர்.

செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10 பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்காக மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின், கற்றலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, அவர்களுக்காக பள்ளிகள் திறக்கவும் அரசு முடிவு செய்தது.

பள்ளியின் நுழைவாயிலில் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேன்செய்வது, கைகளுக்கு கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளன. மேலும், மருத்துவ குழுக்கள் மூலம் அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா, காய்ச்சல் இருக்கிறதா என்பதும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் என்ற அளவில் சமூக இடைவெளியுடன் உட்கார வைக்கப்படுவார்கள். மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை என்பதால், பள்ளிக்கு வராத குழந்தைகளுக்கு அந்தந்த பகுதிகளில் பாடம் நடத்த ‘‘இல்லம் தேடி கல்வி திட்டம்’’ செயல்படுத்தப்பட உள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!