நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு இல்லை! தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அதிரடி!!

அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவிப்பு:

இந்த நிலையில், நவம்பர் முதல் பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் தெளிவான அறிக்கை வெளியிடப்படும் எனவும், பள்ளிகள் திறப்பது ஒத்திவைக்கப்படலாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டதாகவும், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த தெளிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளில் பயில கூடிய மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டும் அதில் பணிபுரியும் ஆசிரியர்களின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டும் பள்ளிகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று நர்சரி பள்ளி உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!