17 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!!

கல்வி இயக்குநரகம் தெரிவிப்பு:

17 மாதங்களுக்குப் பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி, பள்ளிகளுக்கான கற்பித்தல் வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

அதில், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்கள், புத்தாக்க பயிற்சிக் கட்டகங்கள் ஆகியவை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தமிழக அரசு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் கை கழுவும் வசதி, சோப்பு, தண்ணீர் கட்டாயம் வைத்திருக்க, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் தகவல் தெரிவிக்கப்பட்டு, கொரோனா தொற்று குறித்து பரிசோதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!