6- 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்.6 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!!

மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு:

கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு 6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கான வரும் 6-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 50 சதவீத மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெறும் எனவும் ஒரு வாரத்தில் ஐந்து நாட்களுக்கு பள்ளிகள்  தொடங்க  மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

இது தொடர்பான அறிவிப்பை லே துணை ஆணையர் வெளியிட்டார். அந்த அறிவிப்பின் படி, லே மாவட்டத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செப்டம்பர் 6 முதல் மீண்டும் திறக்கப்படும். அனைத்து பள்ளிகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தனித்தனியாக மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!