நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு!! இன்று முதல் பாட புத்தகங்கள் விநியோகம்!!

மாவட்ட கல்வித்துறை தெரிவிப்பு:

நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட உள்ளது. தற்போது முதல்பருவம் முடிந்து இரண்டாம் பருவம் தொடங்கி இருக்கிறது. இதனால் 2ம் பருவ பாட புத்தகங்கள் விநியோகம் செய்யும் பணியில் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

பாட புத்தக விநியோகம்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14,427 மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்கப்படும். கிருஷ்ணகிரி வட்டார கல்வி மையங்கள் உள்ள பெத்த தாளப்பள்ளி, துரிஞ்சிப்பட்டி, கங்கலேரி, தின்னகழனி, மாதேப்பட்டி உள்ளிட்ட 64 பள்ளிகளுக்கு இன்று 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பாட புத்தகம் விநியோகிக்கப்படுகிறது. நாளை மற்ற பகுதிகளுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!