நாளை முதல் பள்ளிகள் திறப்பு!! முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

தமிழக அரசு தெரிவிப்பு:

நாளை தமிழகம் முழுவதும் பள்ளி திறக்கப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர முன்னேற்பாடுகள்:

தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதியான நாளை முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில்  பள்ளிகளை திறப்புக்காக முன்னேற்பாடுகள் திங்ககிழமை தொடங்கப்பட்டன. வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமரும் வகையில் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்யும் வகையில் குடிநீர் பைப்புகள் அமைக்கப்பட்டும் வருகின்றன.

மேலும் பள்ளிகளில் கொரோன தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தி, மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!