இன்று 9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 1 மணிவரை மட்டுமே பள்ளிகள் திறப்பு!!

புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிப்பு:

புதுச்சேரியில் வெகு நாட்களுக்கு பிறகு நிகழ் கல்வியாண்டுக்கான பள்ளி கல்லூரிகள், இன்று (1.09.2021) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி வகுப்புகள் காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுழற்சி முறையில் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும், 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளிலும், சுழற்சி முறையில் புதன்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அனைத்து வர அறிவுறுத்தப்படுகிறது.

இன்று புதன்கிழமை அன்று 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் ஆர்வத்தோடு பள்ளிக்கு வருகை தந்தனர்.

காலை 9 மணி முதல் 1 மணி வரை மட்டுமே  பள்ளிகள் இயங்கும் என்றும், புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!