தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது எப்போது? – முதல்வர் இன்று ஆலோசனை!

பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று (13.10.2021) ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு முக்கிய முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் மாணவர்கள் நலனில் அதிக கவனம் தேவை என்பதால் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணிகளை அந்தந்த பள்ளி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் (13.10.2021) ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது, விஜயதசமியை முன்னிட்டு கோயில்களை திறப்பது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.

இந்த கூட்டத்தில் சுகாதாரம், வருவாய், பள்ளிக்கல்வி ஆகிய துறை அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!