நவம்.1ம் தேதியன்று பள்ளிகள் திறப்பு ரத்து – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாளான நவம்பர் 1ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்நாளில் அனைத்து பள்ளிகளையும் மூடும்படிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூடல்:

பள்ளிகளில் அதற்கான முன்னேற்பாடுகளும் ஏறத்தாழ முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதியன்று பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்படாது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் ‘கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாளான நவம்பர் 1ம் தேதியன்று பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு நவம்பர் 13ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!