1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நவம்பர்1-ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு!! முதல்வர் அறிவிப்பு!!

மாணவர்கள் பள்ளி செல்லாமல் பல மாதங்களாக வீட்டிலேயே இருப்பது பெரும் மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள்  தெரிவித்ததை கருத்தில் கொண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் அறிவிப்பு:

நவம்பர் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் கொரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நவம்பர் 1-ந்தேதி முதல் நடத்த அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

9 முதல் 12ம் வகுப்புகளில் சில மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையில் அடுத்தகட்டமாக 6, 7, 8 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாம்.

பள்ளிகள் திறப்பு:

ஒரே நேரத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு திறந்தால் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளை பின்பற்றுவது கடினம் என தெரிவித்து உள்ளனர். ஒரு சில பெற்றோர்கள், அரசின் முடிவை ஏற்றுக் கொண்டு உள்ளனர்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!