நவ.,8ஆம் தேதி முதல் அரை நாள் மட்டும் பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!!

1 முதல் 8ஆம் வகுப்பு களுக்கு நவம்பர் 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் கடந்த 01.09.2021 முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டு 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், 1 முதல் 8ஆம் வகுப்பு களுக்கும் பள்ளிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக நவம்பர் 8, 2021 (திங்கள்) முதல் புதுச்சேரி காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் 1 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரை நாள் மட்டும் கோவிட் 19 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 1. பள்ளிகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் 6 நாட்கள் அரை நாள் மட்டும் இயங்கும்.

2 . 1, 3, 5, 7 ஆகிய வகுப்புகள் திங்கள் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் 2, 4, 6, 8 ஆகிய வகுப்புகள் செவ்வாய் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் நடைபெறும்.

3 . தற்போது மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படமாட்டாது.

4. புதுச்சேரி அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் கோவிட் 19 வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பள்ளிகளில் பின்பற்ற வேண்டும்.

5. பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து நிலை ஊழியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை பள்ளித் தலைமை உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

6. பெற்றோர்கள் தங்களது சுய விருப்பத்தின் பேரில் தத்தமது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம்.

7. மாணவர்களுக்கு வருகைப் பதிவு கட்டாயமல்ல எனவும் தெரிவிக்கப்படுகிறது.

8. பள்ளிக்கு வராத மாணவர்களின் நலன் கருதி தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!