நாளை முதல் பள்ளிகள் செயல்படும்!! வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி!!

பள்ளிகள் திறப்பு குறித்து தகவல்கள்:

கொரோனா நோய் தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் நாளை (புதன்கிழமை) திறக்கப்பட உள்ள நிலையில் வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும், வகுப்பறையில் 20 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று சில மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், பள்ளிகளில் பின்பற்றவேண்டிய சில நடைமுறைகள் குறித்த விளக்கங்களை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின.

மாணவர்களுக்கான இலவச பேருந்து வசதி:

தமிழகத்தில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து பேருந்துகளில் அடையாள அட்டையை காண்பித்து மாணவர்கள் இலவசமாக பேருந்துகளில் பயணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

  • அரசு கல்லூரி, அரசு பாலிடெக்னிக், அரசு ஐடிஐ நிலையங்களில் பயிலும், மாணவ, மாணவியர்கள் அடையாள அட்டையை நடத்துநர்களிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

வழிகாட்டு நெறிமுறைகள்:

  •  மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.
  • ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டுமே சமூக இடைவெளியை பின்பற்றி அமரவைக்க வேண்டும்.
  • மாணவர்களுக்கு நாள்தோறும் உடல் வெப்பநிலையைக் கண்காணித்து அதை உரிய பதிவேட்டில் பராமரிக்கவேண்டும்.
  • பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சத்து மாத்திரைகளை மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.
  • உயர் கல்வி நிலையங்களில் உள்ள விடுதிகள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!