நவ.1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை.. உள்ளூர் விடுமுறை!!

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாளான நவம்பர் 1ஆம் தேதி, உள்ளூர் விடுமுறை என அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

(1) கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாளினை முன்னிட்டு 01.11.2021 (திங்கட்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

(2) 01.11.2021 அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2021 நவம்பர் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (13.11.2021) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.

(3) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த நாளுக்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881)-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 01.11.2021 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த்,  அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நவம்பர் ஒன்றாம் தேதி 1- 8ஆம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!