மத்திய அரசு சார்பில் ரூ.1000 உதவித்தொகையுடன் சுருக்கெழுத்து, கணினி பயிற்சி தொடக்கம்!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பாக திறன் பயிற்சியுடன் கூடிய 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

உதவித்தொகை:

இந்த நிலையில் திறன் பயிற்சிகளுடன் சேர்த்து தற்போது 1000 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படவுள்ளதாக மத்திய தொழிலாளர் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 27 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

மேலும் 12ம் வகுப்பு அல்லது அதற்கு மேல் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் திறன் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்கள் மையத்தில் நவம்பர் 30ம் தேதி வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அதனை பூர்த்தி செய்து அதனுடன் ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு அலுவக பதிவு அட்டை, சாதி சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!