பொறியியல் செமஸ்டர் தேர்வில் எளிமையான கேள்விகள்!! துணைவேந்தர் உறுதி!

ஜனவரி 21-ஆம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.  நவம்பர் – டிசம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெறும் என தெரிவித்தது. அதன்படி, M.E., M.Tech., M.Arch., மாணவர்களுக்கும் ஜனவரி 21 முதல் பிப்ரவரி இறுதி வரை தேர்வு நடைபெற உள்ளது.

B.E., B.Arch., மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஜனவரி 21 முதல் மார்ச் 2 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என்றும் அரியர் மாணவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பாக நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளது எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டியிருந்தது. மாணவர்கள் ஒரு செமஸ்டரில் குறைந்தபட்ச வருகைப் பதிவை வைத்திருந்தால் தேர்வெழுதலாம்.

இந்த நிலையில், பொறியியல் செமஸ்டர் தேர்வில் எளிமையான கேள்விகள் கேட்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் உறுதியளித்தார். பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!