UIDAI வழங்கும் பிவிசி ஆதார் கார்டு பெற ஆன்லைன் மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம். அதற்கான எளிய வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.
பிவிசி ஆதார் கார்டு:
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் அதற்கு பதிலாக இந்த பிவிசி கார்டுகளை வாங்கிக் கொள்ளலாம். அதற்கு விண்ணப்பிப்பது சுலபமான ஒன்றுதான். எங்கும் அலையத் தேவையில்லை. பெரிய அளவில் செலவு செய்யவும் வேண்டியதில்லை. ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து வாங்கலாம்.
ஆன்லைன் மூலம் பிவிசி ஆதார் கார்டு பெற விண்ணப்பிக்கும் முறை :
* https://uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் செல்ல வேண்டும்.
*”My Aadhaar” செக்சனில் உள்ள ”Order Aadhaar PVC card” என்பதை கிளிக் செய்யவும்.
*அதன் பிறகு புதிய முகப்பு திரை உருவாகும் 12 இலக்க ஆதார் எண் அல்லது 16 இலக்க விர்ச்சுவல் ஐடியைப் பதிவிட வேண்டும்.
*ஓடிபி வெரிஃபிகேசன் மற்றும் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
பிவிசி கார்டுக்கு நீங்கள் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
முக்கிய குறிப்பு:
பிவிசி கார்டு உங்களது வீட்டுக்கே ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பிவைக்கப்படும்.