தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு நாளை முதல் 3நாள்கள் 2050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், சிறப்பு பேருந்துகள் எங்கிருந்து புறப்படும் என்பது குறித்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சனி, ஞாயிறு உடன் திங்கட்கிழமை தவிரத்து, செவ்வாய், புதன் ஆயுதபூஜை, விஜயதசமி விடுமறை உள்ளது. இதனால், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், இடையில் திங்கட்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை எடுத்தால், தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும். இதனால், பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி உள்ளனர். இதைத்தொடர்ந்து, தமிழகஅரசு சென்னையில் இருந்து மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது.

அதன்படி, ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு நாளையும், நாளை மறுநாளும் தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேட்டில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும்,  சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 2050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்  என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!