காந்தி பிறந்தநாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி… அரசு அறிவிப்பு!!

தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் நாளில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.

பேச்சுப்போட்டி:

இந்த போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களிலிருந்து மட்டும் இருவர் வீதம் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசுதொகை ரூ.2000 வீதம் வழங்கப்படும். போட்டி வருகிற 2ம் தேதி நடைபெறும்.

தமிழ் வளர்ச்சித் துறை தெரிவிப்பு:

பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும்

1. முதல் பரிசு ரூ.5000/-

2. இரண்டாம் பரிசு ரூ.3000/-

3. மூன்றாம் பரிசு ரூ. 2000/-

என்ற வகையில் வழங்கப்படும்.

மேலும் இப்போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களிலிருந்து மட்டும் இருவர் வீதம் தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2000/- வீதம் தனியே வழங்கப்பெறும்.

போட்டி நாள் : 02.10.2021, 10.00 மணி

பள்ளிப் போட்டி நடைபெறும் இடம்:

வட சென்னை:

தருமமூர்த்தி ராவ்பகதூர் காலவல கண்ணன் செட்டி இந்து மேல்நிலைப் பள்ளி
பெரம்பூர், சென்னை.

தென் சென்னை:

ராமகிருஷ்ண மடம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தியாகராய நகர், சென்னை

மத்திய சென்னை:

குழந்தைகள் தோட்டம் மகளிர் மேல்நிலைப் பள்ளி, மயிலாப்பூர்.

கல்லூரிப் போட்டி நடைபெறும் நேரம்: 02.10.2021, பிற்பகல் 2 மணி

வட சென்னை:

அம்பேத்கர் கலைக் கல்லூரி, வியாசர்பாடி, சென்னை

தென் சென்னை

சென்னை மாநிலக் கல்லூரி, சேப்பாக்கம், சென்னை

மத்திய சென்னை

பாரதி மகளிர் கலைக் கல்லூரி, பிராட்வே, சென்னை

அரசு அறிவித்துள்ள கரோனா வைரஸ் தொடர்பான வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி போட்டிகள் நடத்தப்பெறும்”.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!